உடப்பு பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 83 மில்லியன் ஒதுக்கீடு!

 


புத்தளம் மாவட்டத்தில் உடப்பு மற்றும் ஆன்டிமுணையை இணைக்கும் பிரதான பாலத்தை பாதுகாக்கும் நிர்மாண அபிவிருத்திக்காக ரூ. 83 மில்லியன் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று 31.08.2026 திங்கட்கிழமை நாட்டப்பட்டது.

"வளமான நாடு, அழகான வாழ்கை" திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த முக்கிய வீதி அபிவிருத்தி பணி,  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டமானது தேசிய மக்கள் சக்தியின்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான சகோதரர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான சகோதரர் முகமது பைசல் அவர்களின் ஆலோசனையுடனும் ஆரச்சிகட்டுவ பிரதேச சபை தலைவர் சகோதரர் ஜயரத்ன  ஆகியோரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதான பொறியளாலர்கள், பிரஜா சக்தி CDC தலைவர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment

Previous Post Next Post