ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகபட்ச புள்ளிகள்: சிங்களத்தில் 193, தமிழில் 188

 


2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழியில் 193 புள்ளிகளும், தமிழ் வழியில் 188 புள்ளிகளும் அதிகபட்ச மதிப்பெண்களாகப் பதிவாகியுள்ளன எனத் இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குருநாகலைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சிங்கள மொழியில் 193 புள்ளிகளை மிக உயர்ந்த புள்ளிகளாகப் பெற்றார்.

இதற்கிடையில், தமிழ் மொழியில் அதிகபட்ச புள்ளிகளாக 188-ஐ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார் எனத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று (02) புதன்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (RJS தமிழ்)

Post a Comment

Previous Post Next Post