புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஆழ்கிணறு திட்டம் வெற்றிகரமாக நிறைவு!



ரிபாக்

புத்தளம் சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட ஆழ்கிணறு (Deep Well) திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் Sri Lanka Malay Association மற்றும் Muslim Charity Serendib Sri Lanka ஆகிய அமைப்பினரின் கூட்டு முயற்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆழ்கிணறு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் Muslim Charity Serendib Sri Lanka அமைப்பின் பணிப்பாளரும், சமூக சேவையாளருமான முஜாஹித் நிசார், சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த ஆழ்கிணறு மூலம் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடைக்கப்பெற்று, அவர்களின் சுகாதாரம், கல்வி சூழல் மற்றும் நாளாந்த தேவைகள் மேம்படும் உள்ளிட்டவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post