வெள்ளத்தால் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை இயல்பு நிலைக்குத் திரும்பின!

ரஸீன் ரஸ்மின்

கடந்த 22 ம் திகதி பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

வெள்ளநீர் வடியாததால் மூடப்பட்டிருந்த சிலாபம் பொது வைத்தசாலையின் இரண்டு வார்டுகள் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.

கடந்த 22ஆம் திகதி அதிகாலையில் பெய்த கனமழையால் சிலாபம் பொது வைத்தியசாலையின் 4 மற்றும் 5ஆம் வார்டுகளுக்குள் வெள்ளதீர் உட்புகுந்தமையால் அங்கு  சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மற்ற வார்டுகளுக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 

மேலும், அந்த வார்டுகளில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் மற்ற உடைமைகளையும் வெள்ளநீரிலிருந்து பாதுகாப்பதற்கும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரும் முயற்சியினையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று (23) வெள்ளநீர் உட்புகுந்த வார்டுகளை வைத்தியசாலை ஊழியர்கள் சுத்தம் செய்ததுடன், அங்கு நோயாளிகளை மீண்டும் அனுமதித்தனர்.



Post a Comment

Previous Post Next Post