புதிய வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

சாஹிப்

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ரத்மல்யாய 618/பி  கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள YMMA கிராமத்தின் வரிய குடும்பம் ஒன்றுக்கு நிரந்தர வீடொன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழை (22) இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த வீட்டை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும்  பிரஜா சக்தி  தலைவருமான ஐ.எம். கியாஸ் , ரத்மல்யாய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்த்தீபன் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.




Post a Comment

Previous Post Next Post