நாயக்கர்சேனை பாடசாலைக்கு தாஹிர் எம்.பி. விஜயம்!

சாஹிப்

கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயக்கர் சேனை கனிஷ்ட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இவ்விஜயத்தின் போது, பாடசாலையின் தற்போதைய கல்விச் சூழல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தேவையான மிக அத்தியாவசியமான தேவைகள் குறித்து அதிபர் மற்றும் பழைய மாணவர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டது. 

பாடசாலையின் நிலவரங்களை உன்னிப்பாகக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகளை மிக விரைவில் நிறைவேற்றித் தருவதாக இதன்போது உறுதியளித்தார். 

Post a Comment

Previous Post Next Post