நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலிம் பட்டமளிப்பு விழா!


சப்றாஸ் - ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலிம் பட்டமளிப்பு விழா நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபாரக் (ரஸூலி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் விஷேட அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தாஹிர் மரைக்கார் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

மேலும், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விஷேட பேச்சாளர்களாக அ.இ.ஜ.உலமாவின் முன்னாள் செயலாளரும், புத்தளம் அப்துல் மஜீத் கல்வி நிலையம் , ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் என்பனவற்றின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எச். அப்துல் நாஸர் (றஹ்மானி) மற்றும் விருதோடை ஜூம்ஆ பள்ளி (மர்கஸ்) பேஷ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி நஸ்மின் (உஸ்மானி) ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமானியத்துல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியின் போசகர் அஷ்ஷெய்க் எம்.ஐ. நூறுல்அமீன் சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

அத்துடன், கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பட்டம் பெற்று வெளியாகும் ஆலிம்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த உஸ்தாத்மார்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு அதிதிகளால் நினைவுச் சின்னம், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலிம்களாக நுரைச்சோலை, கொளனியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எல்.அப்றாஸ் (அமானி), பள்ளிவாசல்துறையைச் சேர்ந்த வை. உவைஸ் (அமானி), அஷ்ஷெய்க் என். நஸ்ஹான் (அமானி) , மன்னார், எலந்தமோட்டையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் என். நபீஸ் (அமானி), கற்பிட்டியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எஸ்.சஜாத் (அமானி) , அஷ்ஷெய்க் என்.றிஷாத் (அமானி), கற்பிட்டி, கண்டல்குழியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஐ.இம்ஜாத் (அமானி) ஆகிய ஏழு பேர் ஆலிம்களாக பட்டம் பெற்றுக் கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post