இரத்மலானையிலிருந்து யாழ். சென்ற விமானம்!

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை வந்தடைந்தது.

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் ((DP Aviation)) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது,

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post