கே .எ. ஹமீட்
அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில்
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் மற்றும் பைஅத் நிகழ்வுகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், கட்சியின் பிரதி அமைப்பாளர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையில் விமர்சியாக நேற்று (21) நடைபெற்றது.
இதில் முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.




