அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள் புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நந்தன மஹீபால அவர்களை நேற்று (16) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள், நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது புத்தளத்தின் முக்கூட்டு தலைமையின் அவசியம் பற்றியும் ஜம்இய்யாவின் தேவைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், புத்தளத்தில் நடைப்பெறும் அனைத்து அபிவிருத்திக்கும் ஜம்இய்யா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபையின் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம்
நகரக் கிளை.