நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!

நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்பு அதன்போது திருடப்பட்டதாக . பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்து மேற்படி ஆவணங்களை பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post