'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்' எனும் நூல் வெளியீடு!

மூத்த எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய "டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

'கர்பாஷ யுத்தய' எனும் பெயரில் அண்மையில் சிங்கள நூல் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், மூத்த எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களினால் டாக்டர் ஷாபிக்கு எதிராக நடந்ந அநியாயங்களை தமிழில் "டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்" எனும் நூலை எழுதியுள்ளார்.

ஆப்ரார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் பிரபல மருத்துவ நிபுணர் ரயீஸ் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித், ஜனாதிபதி சட்டத்தரண பாயிஸ் முஸ்தபா, அஷ்ஷெய்க் அகார் முகம்மத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அரங்கத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவு , பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நேற்று வெளியிடப்பட்ட 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூலை கொழும்பு - 09 தெமடகொட வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிக் புக் ஹவ்ஸில் கொள்வனவு செய்யலாம்.

வாய்ப்பற்றவர்கள் எனது  0777 303 818 என்ற இலக்கத்தில் வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தபாலில் பெற்றுக் கொள்ள முடியும்.





Post a Comment

Previous Post Next Post