தன்னுயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றிய தாய்!


கொத்மலை - ரம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

விபத்துக்குள்ளான பஸ்ஸின் கீழே பெண்ணொருவர் தனது ஒன்பது மாத குழந்தையை இடுப்பின் கீழே பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. 

இந்த விபத்தில் குழந்தையின் தந்தை, ஏற்கனவே பஸ்ஸின் அடியில் நசுங்கி மரணித்திருந்தார். 

பல மணிநேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, தாயும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் நேற்று (11) பிற்பகல் உயிரிழந்துள்ளார். 

குறித்த குழந்தை தற்போது மேலதிக சிகிச்சைக்காக பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த தம்பதியினருக்கு மொத்தமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post