உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒரே கொடியின் கீழ் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உழைக்கும் மக்களே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய அரசியலிலும், அதிகாரத்தைப் பெறுவதிலும் உழைக்கும் மக்களைப் பயன்படுத்திய தற்போதைய அரசாங்கம், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


