இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து: 11 பேர் பலி

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ் சாரதி உட்பட 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பஸ் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post