சாஹிப்
கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை புதன்கிழமை கொத்தான்தீவு, கணமூலை, விருதோடை, கரம்பை மற்றும் உளுக்காப்பள்ளம் ஆகிய பகுதியில் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்படி கொத்தான்தீவில் இரவு 7 மணிக்கும், கணமூலையில் 7.30 மணிக்கும், விருதோடையில் 8 மணிக்கும், கரம்பையில் 8.30 மணிக்கும், உளுக்காப்பள்ளத்தில் 9 மணிக்கும் மேற்படி மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


