ரஸீன் ரஸ்மின்
தேசிய மக்கள் சக்தி சார்பில் புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) இரவு 7.30 மணிக்கு முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறவுள்ளது.
"வெற்றி நமது, ஊர் எமதே" எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைஸல் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
