முல்லைத்தீவில் நாளை இடம்பெவுள்ள அஹதிய்யா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு!


ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்மாஹ் அஹமதிய்யா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (27) காலை 8 மணிக்கு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இல்மாஹ் அஹமதிய்யா பாடசாலை அதிபர் எம்.ஐ.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமா மகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.தமிழ்மாறன் சிறப்பு விருந்தினராகவும், தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றியாஸ், யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் முஹம்மது நிஸ்தாக், வரையறுக்கப்பட்ட இலங்கை  இஸ்லாமிய வழிமுறைகள் சங்கம் மற்றும் அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவருமான பாருக் பதீன் ஆசிரியர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, பிரதம அதிதி, சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களின் விஷேட உரைகள் இடம்பெறவுள்ளதுடன்,மாணவர்களின் கலை நிகழ்ச்சகளும், நியமனக் கடிதம் வழங்கல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் நிகழ்வுகளும் இங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post