நுரைச்சோலை - மாம்புரியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!


ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றுமுன்தினம் (04) வெள்ளிக்கிழமை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மெரீன் படைப்பிரிவினால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

Paid Add

இதன்போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 36 மூடைகளில் அடைக்கப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி  இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 46 வயதுடையவர் எனவும் கொட்டுக்கச்சிய பகுதியைச் சேர்ந்தவர்  என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Paid Add

Paid Add

Paid Add

Post a Comment

Previous Post Next Post