ரிபாக்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாளை வியாழக்கிழமை (03) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து தேர்தல் முன்னெடுப்புகள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ, கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
புத்தளம் - பாலாவி "வைட்" மண்டபத்தில் காலை 9.30 க்கு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
