எம்.ஏ.ஏ.காசிம்
கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கடையாமோட்டை வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் என்.எம். தாஸிம் அவர்களது தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று (29) கணமூலை வடக்கு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களான ஜௌபர் மரிக்கார், முஹம்மது பைரூஸ் உட்பட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ADD




