புத்தளம் மாநகர சபை தேர்தலில் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு-02 க்கான தேர்தல் அலுவலகம் கொழும்பு வீதி, அல்-ஜித்தா, தில்லையடியில் கடந்த வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் பிரதித் தலைவர் சுபியான் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும், புத்தளம் எட்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான எஸ்.எம். மனாப்தீன் குறித்த அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சுயேட்சை குழு-02 இல் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றதுடன், கட்சியின் பிரதித் தலைவரும், 11 வது வட்டாரமாகிய தில்லையடி தெற்கில் போட்டியிடும் வேட்பாளருமான சுபியான் மௌலவி தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து விசேட உரையாற்றினார்.
இந்நிகழ்வினை மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் தேசிய அமைப்பாளர் உப அதிபர் நியாஸ் ஆசிரியர் தொகுத்து வழங்கினார்.





