அதிவேக வீதியில் மூன்று நாட்களில் 134 மில்லியன் வருமானம்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் 3 நாட்களில் 134 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11,  12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387, 000 வாகனங்கள் அதிவேக வீதியில் இயக்கப்பட்டதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம், இந்த வீதியில் 10 கோடி 23 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. கடந்த 11, 12 ஆம் திகதிகளில் அதிவேக வீதியில்  297,736 வாகனங்கள் பயணித்திருந்ததாகவும் அதிலிருந்தே இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தேர்தல் விளம்பரங்கள் (Paid Add)




Post a Comment

Previous Post Next Post