மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் - ஆஷிக்


சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த நாம் அனைவரும் உறுதிபூணவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், ஐ.ம.ச கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளருமான முஹம்மட் ஆஷிக் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும்.

மேலும், உலகளாவிய முஸ்லிம் மக்கள் மீதான கெடுபிடிகள் தலைதூக்கியுள்ள நிலையில், அந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் எனவும், காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் அவர்களின் கொட்டத்தை அடக்குவதற்கும் இறைவன் அருள்புரிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் , இலங்கை மக்கள் பொருளாதார ரீதியாக அனுபவிக்கும் கஷ்டங்கள் நீங்கவும், நல்லிணக்கத்தோடு சந்தோஷமாக வாழவும் இத்தருணத்தில் பிரார்த்திக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post