ரஸீன் ரஸ்மின்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் தந்தையான காலஞ்சென்ற மர்ஹூம் முஹம்மது பதியுதீன் அவர்களது ஞாபகார்த்தமாக புத்தளம் - அல்காசிமி சிட்டியில் நேற்றும் (02) இன்றும் (03) இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மர்ஹூம் முஹம்மது பதியுதீன் அவர்களது குடும்பத்தினர் மேற்படி இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜிதிலும், இன்று திங்கட்கிழமை (03) முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதிலும், 100 வீட்டுத் திட்டம் மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசலிலும் மேற்படி இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அல்காசிமி சிட்டி, முல்லை ஸ்கீம் மற்றும் 100 வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், கல்விமான்கள் உட்பட மஹல்லா வாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, காலஞ்சென்ற மர்ஹூம் முஹம்மது பதியுதீன் அவர்களுக்காக அல்காசிமி சிட்டியில் உள்ள மூன்று மஸ்ஜிதுகளிலும் விஷேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments