புளிச்சாக்குளம் லுக்மானுல் ஹகீம் அரபுக் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா

 


புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள லுக்மானுல் ஹகீம் அரபுக் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு தமது கல்வி ஆண்டினை பூர்த்தி செய்த நான்கு ஆலிம்களுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் துஆ மஜ்லிஸ் வைபவம் என்பன கல்லூரி வளாகத்தில்  இன்று (23) இடம்பெற்றது 

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.யூ.எம்  இர்ஷாத் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அர்ரஷாதிய்யா அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அல்ஆலிம் ஷாபி (ரஷாதி) கலந்துகொண்டார்.

அத்துடன், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், ஊர் மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கொண்டனர்.

மேலும், மாதம்பிட்டி உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் சீரேஷ்ட விரிவுரையாளரும், ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஆஷிக் அபுல் ஹஸன் (ரஷாதி) விஷேட பேச்சாளராக கலந்து கொண்டார்.

இதேவேளை, அல்ஹாபிழ் அல் ஆலிம் எம்.எம். மாஹிர் (லுக்மானி) அக்கரவெளி,  அல்ஹாபிழ் அல் ஆலிம் எஸ்.எம். சஸ்னி (லுக்மானி) தாராக்குடிவில்லு, அல்ஹாபிழ் அல் ஆலிம் எம்.என்.இப்லால் (லுக்மானி) புளிச்சாக்குளம் அல் ஆலிம் எஸ்.எம். அப்ராஸ் (லுக்மானி) கீரியங்கள்ளி ஆகியோர் 2024 ஆம் ஆண்டு மார்க்க கல்வியை பூர்த்தி செய்த குறித்த உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ஷெய்க் என்.எம்.ஹபீல் (கபூரி) JP
புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு




Post a Comment

0 Comments