கொழும்பு |
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது வினாத்தாள் செப்டெம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், முதல் வினாத்தாள் காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும் நடைபெற உள்ளது .
சுமார் 2,649 பரீட்சை மையங்களில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , பரீட்சைதாரிகளின் வருகைப் பதிவேடு அந்தந்த பாடசாலையின் தலைமையாசிரியர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டும் என்றால், திங்கட்கிழமை (02) முதல் செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை திருத்தட் செய்யும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.