உடப்பு க. மகாதேவன், எம்.ஏ.ஏ. காசிம் |
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நடகுண்ட - பஞ்சகுண்ட பசஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிரஷேத்திற்கு எண்ணெய்காப்பு சாத்தும் முதல் நாள் நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு, தற்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ குமாரபஞ்சாப்சரக் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கரும ஆரம்ப கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (06) இனிதே எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது. ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது.
எண்ணெய் சாத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 8 .30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாளை சனிக்கிழமை 7 ஆம் திகதி மாலை 3 மணி வரை இடம்பெறும்.
மேற்படி எண்ணெய் சாத்தும் ஆரம்ப நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் தங்களது குடும்பம் சகிதம் கலந்துகொண்டனர்.
அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கும்பாபிஷேக கர்மங்கள் நடைபெறவுள்ளது.
காலை 7.14 மணி முதல் ஸ்தூபிகள் கும்பாபிஷேகம் தொடர்ந்து காலை 8.30 மணிக்குள் நடைபெறும் . மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு திருக்கல்யாணமும் ஊஞ்சல் வெளி வீதி உலாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.