காலநிலை மாற்றம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான உபாயங்கள் மற்றும் அது தொடர்பான நிதி வசதிகள் பற்றிய பயிற்சி பட்டறையொன்று நேற்று (13) கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடம் மற்றும் நாவற்காடு St. Voyage வரவேற்பு மண்டபம் என்பவற்றில் இரு அமர்வுகளாக இடம்பெற்றன.
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழில் முயற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ரஞ்சன யு.கே. பியதாச, சாமினி கே. ஹேமச்சந்திரா, சுற்றாடல் அமைச்சின் காலநிலை மற்றும் தழுவல் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுவின் தலைவர் கலாநிதி ரஞ்சித் புன்யவர்தன, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரத் பிரேம்லால், சுற்றுச் சூழல் , சமூக மற்றும் ஆளுகை , நிலைபேறான நிதியத்தின் ஆலோசகர் இந்துசான் சாந்தகுமாரன், கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில ஜயசிங்க உட்பட தெரிவு செய்யப்பட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களர் பலரும் கலந்துகொண்டனர்.
யு.என்.டி.பி (UNDP) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் இந்த செயலர்வில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரத் பிரேம்லால், காலநிலை மாற்றம் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளில் அதன் தாக்கங்கள் எனும் தலைப்பிலும், சுற்றாடல் அமைச்சின் காலநிலை மற்றும் தழுவல் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுவின் தலைவர் கலாநிதி ரஞ்சித் புன்யவர்தன காலநிலை இசைவாக்கம் தழுவல் மற்றும் தணிப்பு பற்றியும், சுற்றுச் சூழல் , சமூக மற்றும் ஆளுகை , நிலைபேறான நிதியத்தின் ஆலோசகர் இந்துசான் சாந்தகுமாரன் காலநிலை நிதி எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதன்போது, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சாமின K. ஹேமசந்திரா செயலமர்வின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார்.
தற்போதைய இலங்கையின் காலநிலை தற்போது மிகவும் மாற்றலுக்குரிய ஒன்றாக இருக்கிறது.
இதனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களாகவே காணப்படுகிறார்கள்.
இவ்வாறான காலநிலை மாற்றத்தால் இழக்கக்கப்படுகின் அதிகளவான நாட்டுக்கான வருமானத்தை மீண்டும் ஏற்படுத்துவதும் அது போன்று சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை பாதுகாப்பதும் இந்த செயலமர்வின் பிரதான நோக்கமாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக கற்பிட்டி பிரதேசமானது விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு இடமாகும். இந்தப் பிரதேசம் இயற்கை மாற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மழை, வெயில், வரட்சி மற்றும் காற்றின் மாற்றம் என்பன இந்த தொழில்துறைகளை தாக்கக்கூடிய ஒரு காரணியாக உள்ளது.
இதற்கேற்ற வகையில் தங்களது விவசாயம் மற்றும் ஏனைய தொழிற்துறைகளை பாதுகாப்பதும் அவற்றை கட்டி எழுப்புவதும் மிகவும் அவசியமானதாகும்.
இவ்வாறான முக்கிய தரவுகளையும் தகவல்களையும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகம் என்பது மிகவும் முக்கிய பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் ஊடகவியலாளர்களின் அனுபவ பகிர்வு மற்றும் குழு கலந்துரையாடல்கள் எனபனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.