சாஹிப்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு நாளை 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் பிரதேச மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இந்த எழுச்சி மாநாட்டில் மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் உட்பட முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.
நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், புரிந்துணர்வு, உரிமைகள் மற்றும் இனங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை போன்ற கட்சியின் அடிப்படை கொள்கையை மையமாக கொண்டு இந்த எழுச்சி மாநாடு இடம்பெறவுள ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.