அ.இ.ஜ.உ புத்தளம் நகர கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தெரிவு...!

சாஹிப்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக் கிளைக்கான புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழ் இயங்கி வருகின்ற புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் இன்று (12) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த தெரிவின் போதே ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், செயலாளராக அஷ்ஷெய்க் அஸீம் (ரஹ்மானி), பொருளாளராக அஷ்ஷெய்க் ஜம்ஸித், உப தலைவர்களாக அஷ்ஷெய்க், அல் ஹாபிழ்  ஏ.எம்.ரியாஸ் (தேவ்பந்தி), அஷ்ஷெய்க் சௌக்கி, உப செயலாளராக அஷ்ஷெய்க் இமாம்தீன் (அஷ்ரபி) ஆகியோருடன் அஷ்ஷெய்க் சல்மான், அஷ்ஷெய்க் கரீம், அஷ்ஷெய்க் அப்துல் ஹஸ்பான், அஷ்ஷெய்க் சனூஸ், அஷ்ஷெய்க் முஹ்ஸின், அஷ்ஷெய்க் ஆதிப், அஷ்ஷெய்க் நஸ்பான், அஷ்ஷெய்க் சனூஸ் மற்றும் அஷ்ஷெய்க் அமீன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நகரக்கிளை தலைவராக புத்தளம் இஸ்லாஹியா அரபுக்கல்லுரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post