புத்தளம் நிருபர்
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் 2024 ம் ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (03) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எம்.ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க அமல் மாயாதுன்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும், புத்தளம் மாவட்ட பதில் நீதவான் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.இக்பால், சாஹிரா தேசிய பாடசாலை அதிபர்ஐ.ஏ.நஜீம், பாலாவி முஸ்லிம் வித்தியாலய அதிபர் நவ்ஷாத், புத்தளம் கல்வி வலயத்தின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.முஹம்மது, பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி ஒன்றும் அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.