சாஹிப்
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் இன்று (03) புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் - பாலாவி பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்திய போதே குறித்த சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது நான்கு பெரிய பண்டல்கள் அடங்கிய 40 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.