முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவபெரும காலமானார்...!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின் வயர்களை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

63 வயதுடைய பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post