சாஹிப்
முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மங்கள எளிய சமுர்த்தி வங்கியினால் நடத்தப்படும் தமிழ் - சிங்கள புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்மாதம் 27 ஆம் திகதி கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முந்தல் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மங்கள எளிய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி, கணமூலை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் மங்கள எளிய வலய மக்களின் ஒத்துழைப்பு, அனுசரணையுடன் இந்த போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மங்கள எளிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எம்.நபீல் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் பெரியவர்கள், சிறியவர்களுக்கான மைதான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும், குழு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.