அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் சொந்த நிதியிலிருந்து முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஆறூர் புதுக்குடியிருப்பு, புளிச்சாக்குளம், உடப்பு, பத்துளுஓயா, தாராவில்லு, அக்கரவெளி பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பேரீச்சம்பழங்கள் அந்தந்த பகுதி மஸ்ஜித்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
கீரியங்கள்ளி சென்ரல் ஹாட்வெயார் உரிமையாளரும், சமூக சேவகருமான தேசகீர்த்தி இர்ஷாத் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க,
கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆசிக் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீன் ஆகியோரின் மேற்பார்வையில் 1 மில்லியன்
ரூபா பெறுமதியான பேரீத்தப்பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.