அலிசப்ரி ரஹீமின் தொடர்ச்சியான முயற்சி; நிறைவடையும் நிலையில் தில்லையடி அல்ஜித்தா பாலம்


சாஹிப்

புனரமைக்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்ட புத்தளம் - தில்லையாடி அல்ஜித்தா கிராமத்திற்கு செல்லும் பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் முன்மொழிவுக்கமைய, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், நாட்டில் திடீரென ஏற்பட்ட கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குறித்த பாலத்தின் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டன. 

இந்த நிலையில், அல்ஜித்தா பாலத்தின் புனரமைப்பு பணிகளின் அவசியம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தற்காலிகமாக கைவிடப்பட்ட குறித்த பாலத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, அது நிறைவடையும் நிலையில் காணப்படுவதுடன், அந்த பாலத்தின் நிர்மாண பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது முன்னாள் நகர சபை உறுப்பினர் நகுலேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் இணைப்பாளர்களான எச்.  அமீர் அலி ஆசிரியர் மற்றும் முஹம்மத் நிஷாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post