கற்பிட்டி OIC பணி நீக்கம்...!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வடமேற்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, கட்டுபொத்த  பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post