ரிபாக், எம்.ஏ.ஏ.காசிம் ||
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம்-நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலைய ஊழியர்கள் இன்று நண்பகல் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில காரணங்களை முன்வைத்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளவும், மின்சார சபைக்கு சொந்தமான சில வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, நுரைச்சோலை பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து மின்சார சபை அலுவலகங்களுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளை பறக்க விடுமாறும், ஊழியர்கள் அனைவரும் கறுப்பு பட்டிகளை அணியுமாறும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.