ரிபாக் ||
கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் கொய்யாவாடி பகுதியில் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடைய பாலாவி , நாகவில்லு பகுதியைச் சேர்ந்தவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டி ஒன்றை மறைத்து சோதனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உள்ளாடைக்குள் குறித்த ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்பும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் புத்தளம் மற்றும் மதுரங்குளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
