கஞ்சாவுடன் கடன் வழங்கல் பிரிவு உத்தியோகத்தர் கைது...!



ரிபாக்

புத்தளம் - ஆனமடுவ பகுதியில் உள்ள பிரபல குத்தகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் , கடன் வழங்கல் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் ஒருதொகை கஞ்சாவுடன் நுரைச்சோலை இளந்தையடி பகுதியில் வைத்து இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காரில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற போது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல குத்தகை நிறுவனமொன்றின் ஆனமடுவ கிளையில் கடன் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றி வந்த 40 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் காரின் சாரதி ஆசனத்திலும் மற்றைய முன் இருக்கைகளிலும் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன் பெறுமதி ஏறக்குறைய 20 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post