சனத் நிசாந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரஸீன் ரஸ்மின்

திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேரேவின் இறுதிக் கிரிகைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆராச்சிக்கட்டுவயில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த இறுதி கிரிகை நிகழ்வில் அரச தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் சடலம் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26) காலை 10.30 மணிக்கு புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த உட்பட இருவர்  உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன், அமைச்சரின் வாகன சாரதி காயமடைந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post