புத்தளத்திற்கு நிரந்தர பதிவாளர் நியமனம்

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்டத்திற்கான, புதிய பிறப்பு மற்றும் இறப்பு நிரந்தர பதிவாளராக புத்தளத்தை சேர்ந்த,  பேர்னாட் மேரி இந்துமதி நியமனம் பெற்றுள்ளார்.

புத்தளம், மன்னார் வீதி. சோல்ட்டன், இரண்டாவது மைல் கல், ஒற்றைப்பனையடியில் வசித்து வரும் இவர் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார்.  சமாதான நீதவான் மற்றும் திருமணப் பதிவாளராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார்.

பதிவாளரை திங்கள் முதல் வெள்ளி வரை புத்தளம், தள வைத்தியசாலை அலுவலகத்திலும்,  சனி, ஞாயிறு தினங்களில், தனது இல்லத்திலுள்ள அலுவலகத்திலும் சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post