சாஹிப்
புத்தளம் கருவலகஸ்வெவ தேவநுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இரண்டு கொம்பன் யானைகள் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த கொம்பன் யானைகள் இரண்டும் தனிநபர் ஒருவருடைய காணியில் உள்ள மின்வேலியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
35 வயது மதிக்கத்தக்க வாசல என்று அழைக்கப்படுகின்ற கொம்பன் யானை நேற்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும்,40 வயது மதிக்கத்தக்க வலகம்பா என்று அழைக்கப்படுகின்ற மற்றைய யானை ஒருவாரத்திற்கு முன்பே உயிரிழந்துள்ளதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதிக வலுகொண்ட மின்சார வேலியை பொறுத்தியமையினாலேயே மேற்படி இரண்டு கொம்பன் யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த குறித்த இரண்டு யானைகளும் நிகவெரட்டிய மிருக வைத்தியர் இசுறுவினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸார் இணைந்து இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கண்டு வருகின்றனர்.
