ஏறாவூர் நகர சபையின் செயலாளரை உடனடியாக விசாரியுங்கள்...!

நமது நிருபர்

ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமை உடனடியாக விசாரணை செய்யுமாறு, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் முறைப்பாட்டுக்க‌மைய‌ தேசிய தேர்தல்கள் ஆணையக‌ம் அம்பாறை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது. 

அரச கடமை நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி  வேட்பாளர் மூவரை அழைத்து மாலை அணிவித்தமை,  அரச கடமை நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தைமை அரச உத்தியோகத்தர்களை பிழையாக பயன்படுத்தியமை, நிதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பல கட்சிகள் ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்திருக்கும் நிலையில் SLMC கட்சி வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து ஊக்கப்படுத்திய‌மை தொடர்பில் ஏறாவூர் நகர சபையின் செயலாளரது செயற்பாடுகளில் அதிக அதிருப்பி அடைந்திருந்த ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் C. M. மழ்ஹர்தீன் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

Previous Post Next Post