புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு செயலமர்வு

இர்ஷாத் ரஹ்மதுல்லா, ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

அடிமட்டங்களுக்கான முரண்பாடு தீர்வு தொடர்பிலான ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களை தெளிவுபடுத்தும் 3 நாள் வதிவிட செயலமர்வு அலவ்வ - துல்ஹிரியவில்  அமைந்துள்ள MASSATENA பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அணுசரணையில் இயங்கும் வேல்ட் விசன் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் GRACE PROJECT திட்டத்தின் கீழ் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை இடம்பெற்ற இந்த செயலமர்வில் புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் , கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சமூக  நல்லிணக்கத்தின் செயற்பாடுகளில் துறைசார்ந்தவர்களின் பங்களிப்பு அது போன்று  இன ஒற்றுமை என்பவைகளை  கருத்திட்டமாக கொண்டு இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடிப்படையாக ஒரு மனிதன் அல்லது குழுக்களினது அமையப் பெறவேண்டிய 9 அம்சங்கள் பற்றிய அறிவு பற்றி விளக்கம், எதிர்பார்க்கும் இலக்கின் ஒரு முக்கிய கருபொருளாக அமைந்திருந்தமை இதன்  சிறப்பு அம்சமாகும்.

சமூக விஞ்ஞான கட்டமைப்பு எதனை மக்களுக்கு வலியுறுத்துகின்றது என்ற எடுகோளின் அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகள் ஊடாக கருத்துப் பறிமாறல்கள் இதன் போது பகிரப்பட்டது.

பல்வேறு தலைப்புக்களில் காலத்தின் தேவை,மக்களின் மாற்றத்திற்கான அடிப்படை போன்ற விடயங்கள் என்பன எந்த வகையில் சிந்தனை ரீதியான மாற்றங்களுக்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்கான பல உதாரணங்கள் மூலம் செயலமர்வின் போது பயிற்றுவிப்பாளர் கலாநிதி சுனில் சிறிவர்தனவினால் எழுந்தமான உவமானங்கள்,மற்றும் பெயர் பெற்ற சர்வதேச பிரபலங்களின் உதாரணங்களுடன் விளக்கமளிக்கப்பட்டன.

இதேவேளை செயலமர்வின் இறுதிநாளான நேற்று திங்கிழமை மாலை இடம் பெற்ற இறுதி நிறைவு அமர்வின் போது world vision நிறுவனத்தின்   Grace Project முகாமையாளர் தீப்தி சில்வா , புத்தளம் மாவட்ட  செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத், கம்பஹா  மாவட்ட   மேலதிக அரசாங்க அதிபர் ஜே.டபிள்யூ. எஸ்.கித்சிறி உள்ளிட்ட  பலரும்  பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும், மக்கள் மத்தியில் பணிகளை முன்னெடுக்கவுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களை வட்ஸ்அப் குழுமத்தில் இணைக்கும் செயற்பாட்டினை புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் கம்பஹா மாவட்ட மேலதிக செயலாளர் ஆகியோர் உத்தியபூர்வதாக ஆரம்பித்து வைத்தனர்.



Post a Comment

Previous Post Next Post