புலமைப் பரிசில் பரீட்சையில் அல்-மின்ஹாஜ் மு.ம.வி. விஷேட தேவையுடைய மாணவி முன்ஸீபா சித்தி...!

எம்.ஏ.ஏ.காசிம்

அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்  மதுரங்குளி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலாயத்தின் விஷேட தேவையுடைய மாணவியான மவ்சூதீன் முன்ஸீபா 77 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இதன்போது, குறித்த மாணவி மவ்சூதீன் முன்ஸீபா மற்றும் பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.தமீம் .அன்சார் ஆகியோரை படத்தில் காணலாம்.

இவ்வாறு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற குறித்த மாணவிக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்கும் பெற்றோர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post