பெருக்குவற்றான் பேல் (Pearl) பாலர் பாடசாலை மாணவர்களின் கண்காட்சி

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பெருக்குவற்றான் பேல் (Pearl) பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் சிறுவர்  கண்காட்சி நிகழ்வொன்று பாலர் பாடசாலை வளாகத்தில்  திங்கட்கிழமை (06) இடம்பெற்றது.

குறித்த பலர் பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத்திறன்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் முகமாக இந்த கண்காட்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் குறித்த மாணவர்களால் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தாமரைக் கோபுரம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் , வெளிச்சவீடு, துறைமுகம், சொகுசு வீடுகள்,  கட்டடங்கள் உட்பட பல வகையான கைப்பணிகளும், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குறித்த பாலர் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை பொறுப்பாசிரியை எச்.எப்.ஹரீஸா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி றூபிகா, பெருக்குவற்றான் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எச்.தமீம் அன்சார், சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.மிஹ்ழார் நளீமி, பெருக்குவற்றான் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.சி.நஜூமுதீன், கராத்தே சங்கத்தின் தலைவரும், போதனாசிரியருமான எம்.பைரூஸ், சமூக சேவையாளர் ஏ.ஜி.இர்சால் , பாலர் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த சிறுவர் கண்காட்சியை பார்வையிட, பெருக்குவற்றான் முஸ்லிம் மஹா வித்தியாலயம், சமீரகம முஸ்லிம் மஹா வித்தியாலயம் மாணவர்கள் உட்பட உலமாக்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள் உட்பட பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தந்தனர்.

முற்றிலும் மாணவர்களின் ஆக்க திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் பாடசாலையின் ஆசிரியை மற்றும் நிர்வாகத்தினரின் வழிகாட்டலில், அனைத்து மாணவர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிகாட்டியிருந்தனர்.



Post a Comment

Previous Post Next Post