சாஹிப் அஹ்மட்
சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டிலும் Puttalam Women Leaders இன் செயல்படுத்தலுடனும் புத்தளம் நகர சபை, ரம்ய லங்கா, WODEPT நிறுவனம் என்பவற்றின் பங்குபற்றலுடனும் இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இந்த இரத்ததான ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமத தலைவர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
"நாம் தானமளிக்கும் ஒவ்வொரு இரத்த துளியும் நல்லிணக்கத்திற்கான உரமாகட்டும்" எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள், படையினர், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என மூவினங்களையும் சேர்ந்த 74 பேர் கலந்துகொண்டு தமது இரத்தத்தை தானம் செய்தனர்.
இதன்போது புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழிகளும், சிலாபம் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் உட்பட ஊரியர்கள் குழாம் புத்தளம் நகர மண்டபத்திற்கு மாவட்ட வருகைதந்து இவ்வுதிரங்களை சேகரித்துக் கொண்டனர்.
மேற்படி இரண்டு வைத்தியசாலைகளிலும் காணப்படும் இரத்தத் தேவைக்கு உதவும் வகையில் இந்த இரத்ததான நிகழ்வு நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




