அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது

   File Pic

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினூடாக 2023 டிசம்பர் மாதத்தில் அஹதிய்யா பாடசாலையில் தரம் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் 

கல்வி கற்கும் மாணவர்களுக்கான  பெறுமதி வாய்ந்த அஹதிய்யா இறுதி சான்றிதழ் பரீட்சையை நடாத்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்கள் உத்தேசித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர்கள், அஹதிய்யா பரீட்சை ஆணையாளர், பிரதிப் பரீட்சை ஆணையாளர்,அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் நிருவாகிகள் மற்றும் கல்விப் புல உயர் அதிகாரிகள் ஆகியோர் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி பரீட்சையை தொடர்ந்து நடாத்துமாறு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக இக்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

👉பரீட்சைக்கு தோற்ற வேண்டியோர் யார்?

1) அஹதிய்யாவில் தரம் 10 மற்றும் 11இல் கல்வி கற்கும் மாணவ மாணவியர்

2) உரிய தகைமைகளைப் பெற்றிருந்தும் கூட 2017,2018,2019, 2020, 2021,2022,2023 ஆகிய வருடங்களில் அஹதிய்யா பரீட்சைக்குத் தோற்ற முடியாது போன அஹதிய்யாவில் இணைந்து கல்வி கற்றவர்கள் மற்றும் கற்று வெளியேறியோர்  

👉தோற்ற வேண்டிய பாடங்கள்

1) *அகீதாவும் மஸாதிருஷ் ஷரீஆ மற்றும் அரபு மொழியும்*

(இஸ்லாமிய கோட்பாடுகளும் சட்ட மூலாதாரங்களும்- Principles and Fundamentals of Islamic and Arabic Language)

2) *அல் பிக்ஹுல் இஸ்லாமி* 

(இஸ்லாமிய சட்டநெறி-Islamic Law)

3) *அஸ்ஸீரா வத்தாரீக்* (இஸ்லாமிய வரலாறு- Seera and Tareekh)

4) *அல் அக்லாகுல் இஸ்லாமிய்யா* (இஸ்லாமியப் பண்பாடு- Islamic Values)

👉படிக்க வேண்டிய பாடப்பரப்புக்கள் 

1) முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 மற்றும் 11 பாடப் புத்தகங்கள் 

👉 விண்ணப்பிக்கும் முறை

Online (நிகழ்நிலை) மூலம் 

👉Online (நிகழ்நிலை) மூலம் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி:-

*2023.11.10ம் திகதி காலை 9.00 மணி முதல் 2023.11.20ம் திகதி இரவு 9.00 மணி வரை*

👉உங்கள் பணி

1) அஹதிய்யாக்கள் , மஸ்ஜித்கள், அரபு மத்ரஸாக்கள், அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றின் மூலம் அஹதிய்யா பரீட்சை பற்றி பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் 

2) விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகளை மாவட்ட அஹதிய்யா சம்மேளனங்கள் மூலம் ஏற்பாடு செய்தல்

விண்ணப்பங்களை பிழையாக பூர்த்தி செய்தல் அல்லது பிழையான தகவல்களை வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளல்

இத்தவறுகளை நிவர்த்தி செய்யும் முகமாக பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு மாணவர்களின் முழுப் பெயர், பிறந்த திகதி போன்ற ஏனைய தகவல்களை விரைவாக பரிசீலித்து 2023.11.02ம் திகதியில் வெளியான  பரீட்சைகள் ஆணையாளரின் கடிதத்தின் பிரகாரம் விதிமுறைகளை நன்றாகவும் தெளிவாகவும் வாசித்து விளங்கிய பின்னர் விண்ணப்பங்களை online மூலம் பூரணப்படுத்துமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

மேற்படி அரிய சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம் என்றும் மீண்டும் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும் என்பதையும் இத்தால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வஸ்ஸலாம்

"கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காமவனாக இருந்துவிடாதே"

எமது தூய பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! 

Farook Fatheen - Teacher,

National Vice President & Exam Committee Member Central Ahadiyya Federation

0775394999

Post a Comment

Previous Post Next Post